SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

பணி நிறைவு பாராட்டு விழா -24.03.2026

 24.03.2025 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் அருள் தந்தையருக்கு ஜூபிலி விழா நடைபெற்றது.


இவ் விழாவினை புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள் முனைவர்.M. பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.


மேலும் எம் பள்ளியின் தாளாளர் அருட் சகோதரர்.K.. ஆரோக்கியசாமி சே.ச, தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச மற்றும் அருட்தந்தை.Y. பாஸ்கர் சே.ச,அவர்களும் முன்னிலை வகித்தனர்.


புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை P.S.அருள்  சே.ச  அவர்களுக்கு ஜூப்ளி விழா கொண்டாடப்பட்டது.

எம் பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பாராட்டு பெறுபவர்கள் திரு. ஜோசப் டிக்ஸ்ன் முதுகலை உயிரியல் ஆசிரியர், திரு விக்டர் சாமிக்கண், பட்டதாரி சமூக அறிவியல் ஆசிரியர்,திரு ஜோசப் இன்ஸ்டன்ட், பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ,விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருட்தந்தையர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுரை வழங்கப்பட்டது. 

இவ்விழாவில் பள்ளி பாடகர் குழுவினால் இறைவணக்கம் பாடப்பட்டது. 

மேலும் விழாவில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post