SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.

 .


2025-2026  ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் மன்ற பொதுக்குழு கூட்டம் 26 ஜனவரி 2026 அன்று 10 மணியளவில் இறை வணக்கத்துடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது .

 மன்றத்தின் தலைவர் மதிப்பிற்குரிய       திரு .பி கே .தியாகராஜன் ஐயா அவர்கள்  வரவேற்புரை நிகழ்த்தினார். 

இவ்விழாவின் தலைவராக பொறுப்பேற்ற புனித வளனார் கலைமனைகளின்  அதிபர் டாக்டர் .எம் .பவுல்ராஜ் சேசுசபை அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 முன்னாள் மாணவர் மன்றத்தின் கடந்த ஒரு வருட செயல்பாடுகள் காணொளிக் காட்சியின் மூலமாக அறிக்கையாக சமர்பிக்கப்பட்டது. 








முன்னாள் மாணவர் மன்றத்தின் சார்பாக  திரு.டாக்டர் .வி. ரவீந்திரநாத் M. D ,திரு.பி. சுரேஷ் பாபு  RTO SRIRANGAM ,திரு.ஆர் பி ராமச்சந்திரன்,தொழிலதிபர் ,திரு. ஜே. ராபின்சன் ஆசிரியர் ஆகியோருக்கு விருதும்  நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

 இவ்விழாவில் விருது பெற்றவர்கள் தங்களது அனுபவ பகிர்வுகளை முன்னாள் மாணவர் மன்றத்தினரிடையே பேசி மகிழ்ந்தார்கள். 


 முன்னாள் ஆசிரியர்கள் சிறப்பு செய்யப்பட்டார்கள் .முன்னாள் மாணவர் மன்றத்தின் உடைய மேனாள் பொறுப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நமது பள்ளியின் நுண்கலை மன்றத்தின் மாணவர்கள் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

முன்னாள் மாணவர் மன்றத்தினுடைய இயக்குனர் தந்தை V. ஜார்ஜ் சேசுசபை. அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.குழு புகைப்படம் எடுக்கப்பட்டு.வந்திருந்த அனைவருக்கும் அன்பின் அருஞ்சுவை விருந்து அளிக்கப்பட்டது.


130 கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து பெருமை சேர்த்தார்கள்.







Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post