புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆடிபெர்ட் அறிவியல் மன்றத்தின் சார்பில் "அறிவியல் கண்காட்சி – 2026" இன்று (28.07.2026) வளனார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் அருள்திரு. V. ஜார்ஜ், சே.ச. தலைமை தாங்கி, அறிவியல் சிந்தனையின் அவசியத்தையும், மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
முதுகலை ஆசிரியர் அருள்திரு. S. ஜெயராஜ், சே.ச. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் தொடங்கி, வரவேற்புரை, தலைமையுரை, நன்றியுரை ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்வெளி அறிவியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதுமையான செயல் மாதிரிகள் மற்றும் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். மாணவர்களின் அறிவியல் திறன், படைப்பாற்றல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் மன்ற உறுப்பினர்கள் சிறப்பாக மேற்கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்த்து, எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. அனைவரின் பாராட்டுகளுடன் அறிவியல் கண்காட்சி – 2026 இனிதே நிறைவுற்றது.




Post a Comment
Thanks for reading.