%20(1).jpg)
புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர். எம். பவுல்ராஜ், சேசு சபை அவர்களின் தலைமையில் புதிய கட்டடம் புனிதப்படுத்தப்பட்டது.
ஸ்ரீ சிவ் நாடார் அறக்கட்டளை மற்றும் HCL குழுமத்தின் தலைவர் திரு .சுந்தர் மகாலிங்கம் அவர்கள் கட்டடத்தை திறந்து வைத்தார்.
பள்ளிப் பாடகர் குழுவின் இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்தந்தை வே. ஜார்ஜ், சேசு சபை அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
அதிபர் அருள்முனைவர் எம். பவுல்ராஜ், சேசு சபை அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்..
HCL குழுமத் தலைவர் திருமிகு. சுந்தர் மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
HCL தொழில்நுட்பத்தின் முதுநிலை துணைத் தலைவர் திரு. பி. சுப்பாராமன் அவர்கள் புதிய கட்டடம் உருவான சூழல் பற்றிய விளக்கக் குறிப்பேட்டை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
மதுரை HCL தொழில்நுட்ப இயக்குநர் திருமிகு. திருமுருகன் சுப்பாராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத் தலைவர் திரு. பி.கே. தியாகராஜன் அவர்கள் சிவ் நாடார் அவர்களின் பெருமைகளை விளக்கிக் கூறினார். விழாவில் கலந்து கொண்ட அருள் தந்தையர்களும், கட்டட பொறியியல் 15 வல்லுநர்களும், முன்னாள் மாணவர் மன்ற உறுப்பினர்களும் சிறப்பு செய்யப்பட்டனர்.
பள்ளியின் தாளாளர் அருள்தந்தை எம்.ஏ. இஞ்ஞாசி, சேசு சபை அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
Post a Comment
Thanks for reading.