திருச்சிராப்பள்ளி மாவட்டம் - பள்ளிக் கல்வித்துறை - மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வை 2025 - 2026 ஆம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக தீவிரமான விழிப்புணர்வு பேரணியை புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்களால் (29 - 1 - 2026 ) காலை நடத்தப்பட்டது .

இதில் திருமதி. அருள்ஜோதி,கலால் கோட்டத் தலைவர், திருச்சிராப்பள்ளி
அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
போதை பொருள் எதிர்ப்பு மன்றம், சாலை பாதுகாப்பு இயக்கம்,நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை - தரைப்படை மற்றும் கப்பல் படையை சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் இப்பேரணியில் பங்கு கொண்டனர்.
இதில் பள்ளியின் தலைமையாசிரியர் அருள் திரு . வி. ஜார்ஜ் சே.ச.அவர்களும்,
பள்ளித் துணை ஆய்வாளர் - முதன்மை கல்வி அலுவலகம் திரு.தட்சிணாமூர்த்தி அவர்களும், கோட்டை சரக காவல்துறை அதிகாரிகளும் மற்றும் இயக்க பொறுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியானது எம் பள்ளியிலிருந்து தொடங்கி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் எம் பள்ளியின் மற்றொரு நுழைவாயில் வழியாக உள்ளே வந்தனர். பேரணியை போதைப் பொருள் எதிர்ப்பு மன்றத்தின் பொறுப்பாளர் திரு. ம.அந்தோணி துரை,திரு ஆர். ஜே. வின்ஸ்டன் ,திரு. ரூபன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.










Post a Comment
Thanks for reading.