SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல் நிலைப்பள்ளியில் 2024- 2025 கல்வி ஆண்டின் முதல் பள்ளி பேரவை

   12.06.2024 அன்று , 2024-2025 ஆம் கல்வி ஆண்டின் முதல் பள்ளி பேரவை புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது. 

 பேரவையில் வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை. M.பவுல்ராஜ் சே.ச கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி தலைமையுரை ஆற்றி சிறப்பித்தார். 

  இக்கல்வியாண்டின் ஆங்கில வழிக் கல்வி    பொறுப்பாளராக அருட்தந்தை.A.ஜோசப் சே.ச அவர்கள்  பொறுப்பேற்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். 

    இக்கல்வியாண்டின் புதிய ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச அறிமுகம் செய்து வைத்தார். 

\

புதிய ஆசிரியர்களுக்கு பொன் துயில் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. 

பள்ளியின் தாளாளர் அருட்தந்தை .M.A.இஞ்ஞாசி சே.ச அவர்கள்  ஆசியுரை வழங்கினார். 

  நம் பள்ளியில் புதிதாக கூடுதல் உதவி தலைமை ஆசிரியராக திரு.ரெக்ஸ் தாமஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார்



கடல் சாகச பயிற்சி மற்றும் ஆண்டு பயிற்சி முகாம் போட்டிகளில் வெற்றி பெற்ற புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி NCC கப்பற்படை மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

           இயேசு சபை பள்ளி மாணவர்களுக்கான இளமைக் கனல் இளம் எழுத்தாளர் பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் மாதம் தேவக்கோட்டை, புனித தே பிரிட்டோ மேல் நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது . இதில் புனித வளனார் கல்லூரி மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக பங்கெடுத்தனர்.இப்பயிற்சியில் பங்கேற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர் .

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் R. சூர்யா 8 J தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ஆந்திர மாநிலத்தில் மே மாதம் நடைபெற்ற போட்டியில் 16 ,17 &18 தேதிகளில் பங்கு பெற்று ஜூனியர் பிரிவில் இரண்டு முதல் பரிசையும் இரண்டு மூன்றாவது பரிசையும் பெற்று ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இந்திய அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளார் இந்த போட்டி பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது.

கடந்த கல்வியாண்டில் 10, 11மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் பொது தேர்வில் பெற்ற வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

 இந்நிகழ்வில் அருட்தந்தை .A.லியோ சே.ச இருபால் ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும்  மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

 பள்ளியின் கூடுதல் உதவி தலைமை ஆசிரியர் திரு. ஜெயராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

 பட்டதாரி ஆசிரியர் திரு .F.ஜான்சன் நன்றியுரை வழங்கினார். 

 நிகழ்வுகளை ஆசிரியைகள் திருமதி. சாந்தி மற்றும் திருமதி. .இவாஞ்சலின் ஜெயசித்ரா தொகுத்து வழங்கினர்.  

நிகழ்வின் சிறப்பாக தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. 

   மும்மறை வாசகமும் கடந்த ஆண்டு செய்த நன்மைகளுக்கு நன்றியும் இவ்வாண்டு சிறப்பாக செயல்பட இறை வேண்டுதலும் பேரவையில் இடம் பெற்றது.

           நாட்டுப்பண்ணுடன் பேரவை இனிதே நிறைவடைந்தது








Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post