SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

மறைக்கல்வி தொடக்க விழா -16.6.2026

       16.6.26 மறைக்கல்வி தொடக்க விழா புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் லயோலா அரங்கில் மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. 

      பள்ளியின் தாளாளர் அருள் சகோதரர். K.ஆரோக்கியசாமி சே.ச., தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் தந்தை.V. ஜார்ஜ் சே.ச, முதுகலை ஆசிரியர் அருள்தந்தை.S. ஜெயராஜ் சேச முன்னிலை வகித்தனர்.

        

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மறை மாவட்ட மறைக்கல்வி பணிக்குழு செயலர் பள்ளியின் முன்னாள் மாணவர் அருள் தந்தை பவுல் கிறிஸ்டோபர் மற்றும் வேதியர் திரு ராபர்ட் அவர்களும் பங்கேற்றனர்.

        பள்ளி பாடகர் குழுவினரின் இறை வணக்கத்தோடு நிகழ்வு தொடங்கியது.      

    மறைக்கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.M. ஜான் மனோஜ் அவர்கள் மறைக்கல்வி பற்றி மாணவர்களுக்கு அறிமுக உரை நிகழ்த்தினார்

            சிறப்பு விருந்தினர் அருள் தந்தை. பவுல் கிறிஸ்டோபர் அவர்கள் மறைக்கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரை ஆற்றினார்

         கத்தோலிக்க கிறிஸ்தவ மாணவர்கள் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

     பள்ளியின் தலைமை ஆசிரியை அருள் தந்தை அவர்கள் ஆசியுரை வழங்கினார்கள்.

         மறைக்கல்வி ஆசிரியர் திரு அருள் ஞான ஆரோக்கியசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.



 மறைக்கல்வி ஆசிரியர் திருமதி சாந்தா இறுதியில் நன்றி கூறினார்

        மறைக்கல்வி ஆசிரியர் திருமதி சோபியா அவர்கள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post