கல்வி களப்பயணம் 2025
கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை அரசு மருத்துவக் கல்லூரி திருச்சிராப்பள்ளி.
புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் பயிலும் பதினோராம் வகுப்பைச் சார்ந்த உயிரியல் பிரிவு மாணவர்கள் 107 பேர் இரண்டு உயிரியல் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி இன்று 28-07-2025 கல்வி களப்பயணத்திற்காக திருச்சிராப்பள்ளி கி.ஆ.ப.விஸ்வநாதம் பிள்ளை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இப்பயணம் வாயிலாக மருத்துவக் கல்லூரி வளாகத்தை நேரில் பார்வையிட்டு மருத்துவப்படிப்புகள் குறித்த அடிப்படைத் தகவல்களை கேட்டறியும் வாய்ப்பை பெற்றனர். மருத்துவக் கல்லூரியின் அடிப்படை உள்கட்டமைப்புகளையும் சோதனைக் கூடங்கள் மற்றும் பல் வேறு துறைகளில் உள்ள அருங்காட்சியங் களையும் பார்வையிடும் வாய்ப்பு பயனுள்ளதாக அமைந்தது. இக்களப்பயணம் மாணவர்கள் மத்தியில் மருத்துவப் படிப்புகள் குறித்தும் அதோடு தொடர்புடைய துறைகளை குறித்த தேடலுக்கான விழிப்புணர்வை வழங்கியது.

அனுமதி வழங்கிய பள்ளி நிர்வாகத்தினருக்கு உயிரியல் துறை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
Post a Comment
Thanks for reading.