SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

NMMS தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்தது திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி



தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


இந்த நிலையில், 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில் எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும்‌ திறன்‌ படிப்பு உதவித்‌ தொகை திட்டத்‌ தேர்வு, 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இத்தேர்விற்கு தற்போது எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ நமது பள்ளி மாணவர்கள்‌ விண்ணப்பித்தனர்.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நமது பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி அடைந்து மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

மேலும் இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி வழங்கிய ஆசிரிய பெருமக்களை,பள்ளியின் தாளாளர் அருட்தந்தை M.A.இஞ்ஞாசி சே.ச மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச அவர்கள் வாழ்த்துக்களையும்,பாராட்டையும், தெரிவித்தனர்.





Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post