SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

6ஆம் வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு -19.6.2026




பள்ளியின் 6ஆம் வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி 19.6.2026, வெள்ளிகிழமை அன்று பள்ளி வளாகத்தில் உள்ள வளனார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முதலில், பள்ளி படற்குழுவினர் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

தொடர்ந்து திரு.J. ஐசக் சார்லஸ் நியூட்டன், (இடைநிலை ஆசிரியர்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

தலைமை ஆசிரியர் அருட்திரு. V. ஜார்ஜ் சே. ச., அவர்கள் பள்ளியின் ஒழுக்க நெறிமுறைகள் ,செயல்பாடுகள், பள்ளியின் வரலாறு ஆகியவற்றை விரிவாக பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார்.


அதன் பின்னர் ஆசிரியர் கருத்துரை என்ற தலைப்பில் திரு.S. மரியயேசுராஜா, பட்டதாரி ஆசிரியர் அவர்கள் பள்ளியின் இயக்கங்கள் , பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கடமைகளை விரிவாக கூறினார் மாணவர்களின் வகுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.


முடிவில், திரு.G. ஜான் ஜெரோம் பட்டதாரி ஆசிரியர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.


இந்நிகழ்வினை
திரு. A.அருள் ஞான ஆரோக்கியசாமி பட்டதாரி ஆசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.





                                   

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post