2/9/2025 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில்,பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்தினரால் ,நடத்தப்படும் உயர் கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது.
எம் பள்ளியினுடைய முன்னாள் மாணவர் திரு. தர்மராஜ் (Assistant professor) CARE ENGINEERING COLLEGE அவர்களால் இந்த நிகழ்வு பல்வேறு ஆக்கம் தரும் கருத்துக்களால் மாணவர்களுக்கு வழிநடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர் மன்றத்தினுடைய ,இயக்குனர் போற்றுதற்குரிய ,அருட்தந்தை.V. ஜார்ஜ்சே.சஅவர்களும் , எம் முன்னாள் மாணவர் மன்றத்தின் தலைவர் திரு. தியாகராஜன் ஐயா அவர்களும், முன்னாள் மாணவர் மன்றத்தினுடைய செயற்குழு உறுப்பினர் திரு. சீனிவாசன் ஐயா அவர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர் .
மாணவர் சமுதாயம் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்வானது நடைபெற்றது .12ஆம் வகுப்பு மாணவர்கள் ஏறக்குறைய 400 பேர் இதில் கலந்து கொண்டனர்.
Post a Comment
Thanks for reading.