7,8,9 ஆம் வகுப்பு புதிய மாணவர்களுக்கான திசை வழியாக்க பயிற்சி 11-06-2025 தேதி , காலை 9 .45 மணி அளவில் இறை வணக்கத்தோடு தொடங்கியது.
இந்நிகழ்விற்கு வந்தவர்களை பட்டதாரி ஆசிரியர்திரு. A.பெலிக்ஸ் அவர்கள் வரவேற்றார் .
பின்பு பள்ளியின் வரலாற்றைப் பற்றி பட்டதாரி ஆசிரியர்திரு. F.ஜான்சன் அவர்கள் விளக்கி எடுத்துரைத்தார்.
பிறகு பள்ளியின் விதிமுறைகள் பற்றி பட்டதாரி ஆசிரியர்திரு. A. பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்து பேசினார் .
அதன்பிறகு ,"போதைப்பொருள் பயன்பாடு தவிர்க்கிடுவோம்" என்ற கருத்தை அருட்தந்தை A.M ஜெயபதி சே. ச அவர்கள் காணொளி காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.
இறுதியாக தலைமை பண்பு குறித்து அருள் சகோதரர் பிலிப் அவர்கள் காணொளி காட்சி மூலம் எடுத்துரைத்தார்.
இறுதியாக இந்நிகழ்வை தொகுத்து வழங்கிய பட்டதாரி ஆசிரியை நிவேதா அவர்களுக்கும் இந்நிகழ்வில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் திரு. ரூபன் அவர்கள் நன்றி கூறி இந்நிகழ்வை நிறைவு செய்தார்.
Post a Comment
Thanks for reading.