SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

ஆர்டிபர்ட் அறிவியல் மன்றம்

ஆர்டிபர்ட் அறிவியல் மன்றம்



வீட்டுக்கொரு விஞ்ஞானி எனும் அறிவியல் கண்காட்சி போட்டி



22/07/2023 சனிக்கிழமை புதிய தலைமுறை தொலைக்காட்சி வீட்டுக்கொரு விஞ்ஞானி எனும் அறிவியல் கண்காட்சி போட்டி பெரியார் மணியம்மை மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நம் பள்ளியில் இருந்து சீனியர் பிரிவில் 5 படைப்புகளும் ஜூனியர் பிரிவில் இரண்டு படைப்புகளும் காட்சி படுத்தப் பட்டன.
இதில் சீனியர் பிரிவில் செல்வன் S மாத்தேஷ் XI G மற்றும் செல்வன் அப்துல் ரஹ்மான் XI G அவர்களின் வேகத் தடையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் படைப்பு முதல் பரிசை பெற்றுள்ளது.
மேலும் ஜூனியர் பிரிவில் VIII J பிரிவை சார்ந்த செல்வன் மிதுன் மற்றும் செல்வன் வரிஷ் கிருஷ்ணன் உருவாக்கிய நடக்கும் போது மின்சாரம் உற்பத்தி செய்தல் என்ற படைப்பு மூன்றாம் பரிசை பெற்றுள்ளது.


Lunar Talent Test 2023
                         

Open Space Foundation என்ற அமைப்பு Lunar Talent Test 2023 தேர்வை கடந்த 10/10/2023 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தியது.
இத்தேர்வை நம் பள்ளியில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 30 பேர் எழுதினர்.
இவர்களில் செல்வன் A முகிலன் VIII A 8129 மற்றும் செல்வன் K. வினோத் VIII A 8142 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்

அறிவியல் கண்காட்சி போட்டி


21.10.2023 தூய வளனார் கல்லூரி இயற்பியல் துறை நடத்திய அறிவியல் கண்காட்சி போட்டியில் முதல் பரிசாக ரூ 1000/ பரிசு பெற்றனர்.V மிதுன் VIII J    R. வரிஷ் கிருஷ்ணா VIII J

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு




 30/10/23 திங்கள் கிழமை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நடைபெற்ற 31 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நம் பள்ளியில் இருந்து 22 மாணவர்கள் 11 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 150 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க பட்டது.இவற்றில் ஜூனியர் பிரிவில் நம் பள்ளி மாணவர்கள் R. Sabarish மற்றும் M. Varun ( 8 J) மற்றும் சீனியர் பிரிவில் S Siddarth மற்றும் S. Pradeep Raja ( +2 C)
ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவில் தெரிவு செய்யப்பட்டுள்ள.

தேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாடு


தேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாடு இன்று04/11/2023 சனிக்கிழமை புதுக்கோட்டை அருகே உள்ள புஷ்பகரம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது 
நம் பள்ளியில் இருந்து மாவட்ட அளவில் தேர்வான இரண்டு குழுக்கள் கலந்து கொண்டார்கள்.   அவற்றில் சித்தார்த் மற்றும் பிரதீப் ராஜா இவர்களின் ஆய்வு கட்டுரை மாநில அளவில் தேர்வாகியுள்ளது

 மாநில தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு



25/11/23 ஞாயிற்றுக் கிழமை திருச்சி மாவட்ட புத்தினாம்பட்டியில் உள்ள நேரு நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 31 ஆவது மாநில தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து தேர்வு செய்யப்பட்டவைகள் சமர்ப்பிக்க பட்டன.


இதனில் எம் பள்ளியைச் சார்ந்த 
செல்வன் S Siddarth மற்றும் செல்வன் 
S. Pradeep Raja ( +2 C)

ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவில் நடந்த இம்மாநாட்டில் பங்கேற்று சமர்பித்து பாராட்டுகள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

மாநில அளவிலான விண்வெளி ஆய்வு போட்டி





 நம் பள்ளியில் எட்டாம் வகுப்பு A பிரிவில் பயிலும் A. முகிலன் என்கிற மாணவன் Open Space Foundation நடத்திய மாநில அளவிலான விண்வெளி ஆய்வு போட்டியில் நிலவில் விவசாயம் Agriculture on Moon தலைப்பில் அனுப்பிய ஆய்வுக் கட்டுரை மாநில அளவில் தேர்வாகியுள்ளது.

இதற்காக அவர்கள் நடத்திய வினாடி வினா போட்டியில் முகிலனுடன் வினோத் என்ற மாணவரும் தேர்வாகி இருந்தனர்.
இருவரும் தம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த நிலையில் முகிலன் மட்டும் தேர்வாகி உள்ளார்.


Open Space Foundation என்ற அமைப்பு  02/12/2023 சனிக்கிழமை கோயம்புத்தூரில் நடத்திய பரிசளிப்பு மற்றும் ISRO விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் நம் பள்ளி 8 A மாணவன் A. முகிலன் கலந்து கொண்டு ஒரு தொலை நோக்கியும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றார்.

      மண்டல அளவிலான நாளைய விஞ்ஞானி
          அறிவியல்   கண்காட்சிப் போட்டி
 





*இந்து தமிழ் திசை* நடத்திய மண்டல அளவிலான *நாளைய விஞ்ஞானி* அறிவியல் கண்காட்சிப் போட்டியில் நம் பள்ளியின் 12 - ஆம் வகுப்பு C பிரிவு மாணவர்கள் *பிரதீப் ராஜா மற்றும் சித்தார்த்* ஆகியோர் சீனியர் பிரிவில் *முதல் இடம்* பெற்று வேலூர் VIT - யில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

Post a Comment

Thanks for reading.