SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

மறைக்கல்வி மற்றும் மன்றேசா மன்றம்


                                    மறைக்கல்வி தொடக்க விழா-2023-2024







27.06.2023 அன்று மறைக்கல்வி தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி மறைமாவட்ட மறைக்கல்வி பணி குழு செயலர் அருட்தந்தை மரிய சூசை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  மறைக்கல்வி வகுப்புகளை தொடங்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை மா.ஆ. இஞ்ஞாசி சே.ச மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை வே. ஜார்ஜ் சே.ச. உடன் இருந்தனர்.

மறைக்கல்வி வகுப்புகள் தொடக்கம் 






அன்று மறைக்கல்வி வகுப்புகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆசிரியர்களால் 448 கிறிஸ்தவ மாணவர்களுக்கு  மறைக்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டது.


 ஜூலை மாத  திருப்பலி





7.7.23 அன்று ஜூலை மாத முதல் திருப்பலி நடைபெற்றது. அருட்தந்தை இஞ்ஞாசி சே.ச ,அருட்தந்தை லியோ சே.ச,  கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.


மதுரை  மறைமாநில இயேசு சபை பள்ளி மறைக்கல்வி 
ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் -2023









 8.7.23 அன்று மதுரை இயேசு சபை மறை மாநில பள்ளி மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான பயிலரங்கம்நடைபெற்றது.  இயேசு சபையின் 5 பள்ளிகளின் மறைக்கல்வி ஆசிரியர்கள் இந்த பயிலரங்கத்தில்                   கலந்து கொண்டனர்.




இறை அழைத்தல் சிந்தனை




19.7.23 அன்று இறை அழைத்தல் இயக்குனர் அருட்தந்தை சாலமோன் சே.ச கலந்துகொண்டு மாணவர்களுக்கு இறை அழைத்தல் சிந்தனை வழங்கினார். 10 ,11, 12 வகுப்பு மறைக்கல்வி மாணவர்களும் மன்ரேசா மாணவர்களும் கலந்து கொண்டனர்.



புனித இஞ்ஞாசியார் நவநாள் ஜெப வழிபாடு







24.7.23 அன்று புனித இஞ்ஞாசியார் நவநாள் ஜெப வழிபாடு நடைபெற்றது.அருட்தந்தை தாளாளர் அருட்தந்தை தலைமை ஆசிரியர் அனைத்து மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.





புனித இஞ்ஞாசியார் பெருவிழா சிறப்பு பேரவை


28.7.23 அன்று புனித இஞ்ஞாசியார் பெருவிழா சிறப்பு பேரவை நடைபெற்றது. இதில் மன்ரேசா மாணவர்கள் ஊமை நாடகமாக இஞ்ஞாசியார் வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக நடித்துக் காட்டினர்.






இறை அழைத்தல் சிந்தனை




9.8.23 அன்று இறை அழைத்தல் சிந்தனை மரியின் ஊழியர் சபை அருட்தந்தை அவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மறைக்கல்வி மாணவர்களுக்கு வழங்கினார்.


                                      அக்டோபர்  மாத  திருப்பலி






6.10.23 அன்று அக்டோபர்  மாத முதல் வெள்ளி திருப்பலி நடைபெற்றது. அருட்தந்தை  பிரிட்டோ க.ச  அருட்தந்தை ஜார்ஜ் சே.ச கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

திருச்சி மறைமாவட்ட அளவில்  மறைக்கல்வி மாணவர்களுக்கான கலைப் போட்டிகள்





11.10.23 அன்று திருச்சி மறைமாவட்ட அளவில்  மறைக்கல்வி மாணவர்களுக்கான கலைப் போட்டிகள்  நடைபெற்றது.
        குழு நாடக போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடமும்.     குழு நடனப் போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர்.



மன்ரேசா  மாணவர்களுக்கு தனி  மறைக்கல்வி வகுப்பு 


18.10.23 மன்ரேசா  மாணவர்களுக்கு தனியான (சிறப்பு)  மறைக்கல்வி வகுப்பு தொடங்கப்பட்டது..



மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒரு நாள் தியானம்











21.10.23 அன்று மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒரு நாள் தியானம் நடைபெற்றது. கப்பச்சின் சபையை சார்ந்த அருட் சகோதரர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் தியானத்தை வழிநடத்தினார்கள்.  430 மறைக்கல்வி மாணவர்கள் பங்கெடுத்து பயன்பெற்றனர்.




இறை அழைத்தல் சிந்தனை





31.10.23 அன்று கார்மல் சபையை சார்ந்த அருட்தந்தை 10,12, மற்றும் மன்ரேசா மாணவர்களுக்கு இறை அழைத்தல் சிந்தனை வழங்கினார்.


நவம்பர் மாத  திருப்பலி




3.11.23 அன்று நவம்பர் மாத முதல் வெள்ளி திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியை அருட்தந்தை ஸ்டீபன் OMD மற்றும் அருட்தந்தை இஞ்ஞாசி SJ ஒப்புக்கொடுத்தார்கள்.



புனித வளனார் கெபி





22.11.23 முதல்  புதன்கிழமை தோறும் புனித வளனார் கெபி முன் ஜெபிக்கும் பழக்கம் மறைக்கல்வி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது.

இறை அழைத்தல் சிந்தனை


28.11.23 இன்று அருட்தந்தை அருண் சே.ச  10,12, மற்றும் மன்ரேசா மாணவர்களுக்கு இறை அழைத்தல் சிந்தனை வழங்கினார்.

புனித சவேரியாரின் பெருவிழா திருப்பலி மற்றும் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்




4.12.23 அன்று புனித சவேரியார் திருவிழா முன்னிட்டு மறைக்கல்வி மாணவர்களுக்கு சவேரியாரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது தொடர்ந்து திருவிழா திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியை அருட்தந்தை லியோ ஆண்டனி மனோகர்  OMD, அருட்தந்தை ஆரோக்கியதாஸ் OMD மற்றும் அருட்தந்தை ஜார்ஜ் SJ நிறைவேற்றி மாணவர்களுக்கு இறை ஆசிர் பெற்று தந்தனர்.




ஆசிரியர் அலுவலர்களுக்கான கிறிஸ்துமஸ் ஜெப வழிபாடு



 புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் அலுவலர்களுக்கான கிறிஸ்மஸ் சிறப்பு ஜெப வழிபாடு நடத்தப்பட்டது.




    பள்ளியின் தாளாளர் அருட்தந்தை மா.ஆ. இஞ்ஞாசி சே.ச., தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை வே. ஜார்ஜ் சே.ச., முன்னிலை வகித்தார்.



      முதுகலை ஆசிரியர் திரு மை. ஜான் மனோஜ் கிறிஸ்மஸ் சிறப்பு செய்தி வழங்கினார்.


                                       

                இனிகோ இசைக்குழு கிறிஸ்து பிறப்பு பாடல் பாடி சிறப்பித்தனர்.



     வழிபாட்டின் நிறைவில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு நிர்வாகத்தினரால் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இவ்வழிபாட்டினை மறைக்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.



புத்தாண்டுத் திருப்பலி-2024










3.1.24 புத்தாண்டுத் திருப்பலி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருப்பலியில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை மை.பவுல்ராஜ் சே.ச தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தந்தை அருட்திரு. M.A.இஞ்ஞாசி சே.ச தலைமையாசிரியர் தந்தை அருட்திரு. V.ஜார்ஜ் சே.ச இணைந்து ஒப்புக்கொடுத்தார்கள். இத்திருப்பலியை மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழி நடத்தினார்கள். 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பொது தேர்வை சிறப்பாக எழுதி 100% தேர்ச்சி பெற இறைவேண்டல் செய்யப்பட்டது.

                            

இறை அழைத்தல் சிந்தனை



3.1.24  அன்று பத்தாம் வகுப்பு மறைக்கல்வி மாணவர்களுக்கு இறை அழைத்தல் சிந்தனையை அருட்தந்தை ஆண்டனி தாஸ் HGN வழங்கினார்.




பிப்ரவரி மா.த திருப்பலி 








2.2.24 அன்று பிப்ரவரி மாத முதல் வெள்ளி திருப்பலி நடைபெற்றது. அருட்தந்தை எல்ரோல் OMD, அருட்தந்தை சகாய ஜெயராஜ் மற்றும் அருட்தந்தை V.ஜார்ஜ் சே.ச கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.
       இத்திருப்பலி இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நாள் நினைவாகவும் புனித அருளானந்தர் நினைவு திருப்பலி ஆகவும் கொடுக்கப்பட்டது.










































































Post a Comment

Thanks for reading.