SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

இன்டராக்ட் கிளப்

 

இன்டராக்ட் கிளப்



இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 05.01.24 அன்று மதியம் 3.00 மணி அளவில் நம் பள்ளியில் இயங்கும் இன்டராக்ட் கிளப் உடன் இணைந்து ரோட்டரி சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.      


 நம் பள்ளி தாளாளர் அருட்தந்தை M.A. இஞ்ஞாசி S.J அவர்கள், தலைமை ஆசிரியர் அருட்தந்தை V. ஜார்ஜ். S.J. அவர்கள், சிறப்பு விருந்தினராக டாக்டர். S.P. சசிகலா இளையராஜா MBBS.DDVL, டாக்டர் K. சீனிவாசன் (AKS PROMOTION CHAIR), திருமதி சுபா பிரபு (ரோட்டரி சங்கத் தலைவர்), திருமதி பராசக்தி அசோக் குமார் (ரோட்டரி செயலர்) திருமதி ரேவதி (ரோட்டரி பொருளாளர்), ரோட்டரி சங்க உறுப்பினர்கள், இன்டராக்ட் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு ஆ. ஜான்சன் (BT.ASST.IN.SCIENCE) இயக்க துணை ஒருங்கிணைப்பாளர் திருமதி l.சில்வியா(PG ASST.IN.PHYSICS) இன்டராக்ட்  கிளப் உறுப்பினர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்  250 பேர் கலந்து கொண்டனர்.    






    நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழ் தாயை வணங்கினார்கள். பின்னர் ரோட்டரி சங்கம் சார்பில் இறை வணக்கம் நடைபெற்றது. அதில் ரோட்டரி சார்பில் நான்கு வழியை தலைவர் திருமதி சுபா பிரபு நடத்தி வைத்தார்.  பின்னர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாணவர்கள் சாலை ஜெயசுடர் மற்றும் ராசிக்அகமத் (பதினோராம் வகுப்பு) செயல்பட்டார்கள்.         அதன் பின் மாணவர் கார்த்திகேயன் (பதினோராம் வகுப்பு) வரவேற்புரை நல்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்கள், தாளாளர், தலைமை ஆசிரியர், இன்டராக்ட் ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. 



அதன் பின்னர் இன்ட்ராக்ட் இயக்கத் தலைவர், செயலாளர் தேர்ந்தெடுத்து மரியாதை செலுத்தப்பட்டது.              மேலும் தாளாளர் அருட்தந்தை M.A. இன்னாசி S.J. அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார். 

அடுத்து சிறப்பு விருந்தினர் டாக்டர் S.P. சசிகலா இளையராஜா MBBS,DDVL. தன்னுடைய மருத்துவ பயணத்தை பற்றி சிறப்புரை வழங்கினார். மேலும் நேரப் பயன்பாடு, ஒழுக்கம் போன்ற பல அறிவுரைகளை வழங்கினார்.      







  அதன் பின்னர் டாக்டர் K. சீனிவாசன் மாணவர்களுக்கு பிஸ்கட், பேனா, சான்றிதழ் போன்றவற்றை வழங்கி மகிழ்வித்தார். கடைசியாக நன்றி கூறும் பொருட்டு திருமதி பராசக்தி அசோக் குமார் விழாவிற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறி விழா இனிதே நிறைவுற்றது.

Post a Comment

Thanks for reading.