புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 182வது பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .
இந்நிகழ்வில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் தந்தை அருள் முனைவர் M. பவுல்ராஜ் சே. ச., அவர்கள் தலைமை வகித்தார்.
பள்ளியின் தாளாளர் அருள் சகோதரர் .K.ஆரோக்கியசாமி சே.ச பள்ளியின் தலைமையாசிரியர் அருள் தந்தை.V ஜார்ஜ் சே .ச முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு.K.N.அருண் நேரு, M.S., M.P.,பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும்,பெருமைமிகு முன்னாள் மாணவர்.A.ஜெயராஜ், M.A., M.Ed., நிறுவனர், மன்னா மெஸ் இந்தியா பிரைவேட் லிமிடட் அவர்களும் கலந்து கொண்டனர்.
சென்ற ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்,இன்னாள் இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment
Thanks for reading.