SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது -2024

 

12.01.2024 அன்று வெள்ளிக்கிழமை புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.




இவ்விழாவில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை.M. பவுல்ராஜ் சே.ச. , தாளாளர் அருட்தந்தை.M.A. இஞ்ஞாசி சே.ச, தலைமையாசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச, பொங்கல் விழாவின் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் திருR.P. ராமச்சந்திரன் , துணைத் தலைவர் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் மற்றும் தலைவர் விராலிமலை வர்த்தக கழகம். , முன்னாள் மாணவர் திரு T.பாரிவள்ளல் நிர்வாக இயக்குனர் சித்ரா வணிக வளாகம்,கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சிறப்பித்தனர்.



6ம் வகுப்பு மாணவன் பரணி பொங்கல் விழா பற்றிய சிறப்புரையை நிகழ்த்தினார்.







மாணவர்களின் வண்ண வண்ண கோலங்கள் அனைவரையும் மிளிர்க்க வைத்தது.இப் போட்டியில் 200க்கும்  மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.







6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் வகுப்பு வாரியாக ஆசிரியர்களும் ,மாணவர்களும் இணைந்து பாரம்பரிய பொங்கல் வைத்தனர்

இப் பொங்கல் விழாவில் பாரம்பரிய தமிழரின் பெருமை பறைசாற்றும் பறை இசையுடன் விருந்தினர்கள் வரவேற்க்கப்பட்டனர்.




பொங்கல் விழாவின் கலை நிகழ்ச்சிகளாக பறையாட்டம்,கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மாட்டுக் கொம்பாட்டம், மயிலாட்டம் மற்றும் புலி ஆட்டம் நிகழ்த்தப்பட்டது.

தமிழர்களின் பெருமை பறைசாற்றும் சிலம்பாட்டம் சிறப்பாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பெருமைப்படுத்தினர்.














உழவர்களின் பெருமை பறைசாற்றும் பள்ளி மாணவர்களின் வளர்ப்பு காளைகளும், ஆடுகளும், கோழிகளும், உழவு இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.




இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு பரிசும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இயங்கும் பசுமை படை இயக்க மாணவர்கள் போகி பண்டிகை பற்றிய விழிப்புணர்வு பதாகைக்களுடன் விழிப்புணர்வு அளித்தனர்.

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் மீடியா கிளப் சார்பாக பள்ளியில் நடைபெறக்கூடிய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற இணைய வலைதளம் தொடங்கப்பட்டது.




புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இயங்கும் SUPAM இயக்கம் சார்பாக 100 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசும் ,பாராட்டும் வழங்கப்பட்டது.

ஆசிரியர் அலுவலர்களுக்கான பானை உடைத்தல் போட்டியில் வென்றவர்க்கு பரிசு வழங்கப்பட்டது.



புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இனிப்பு பொங்கலும் கரும்பு துண்டும் எமது பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்தால் வழங்கப்பட்டது.












ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் தமிழரின் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்





பள்ளி மாணவர்களின் ஆரவாரத்தோடு பொங்கல் விழா இனிதே நடைபெற்றது.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post