இன்று நமது புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 182 - வது ஆண்டு விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் தந்தை அருள் முனைவர் M. பவுல்ராஜ் சே. ச., அவர்கள் தலைமை வகித்தார்.
பள்ளியின் தாளாளர் அருள் சகோதரர் .K.ஆரோக்கியசாமி சே.ச பள்ளியின் தலைமையாசிரியர் அருள் தந்தை.V ஜார்ஜ் சே .ச முன்னிலை வகித்தனர்.
நமது பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போதைய திருச்சி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகத்தின் தலைவருமான திரு T.குணசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் நமது பள்ளியின் முன்னாள் மாணவரும் சூர்யா மருத்துவமனையின் நிறுவனரும் குழந்தைகள் மருத்துவருமான மருத்துவர் நீதி மோகன்ராஜ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளி விளையாட்டு விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடந்தேறின. குறிப்பாக மாணவர்கள் தங்கள் குழுக்களில் பண்ண வண்ண உடைகளோடும் கொடிகளோடும் அலங்காரத்தோடும் அருமையாய் அணிநடை பயிற்சி செய்தனர்.
கூட்டுக் குழு உடற்பயிற்சி குடையோடு வண்ண உடையோடு சிறப்பாக நடைபெற்றது.
300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசுகள் பெற்றனர்.
இந்நிகழ்வில் இருபால் ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment
Thanks for reading.