லெவே வரலாறு மற்றும் தொன்மை மன்றத் தொடக்க விழா 28.07.2025 திங்கள் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நம் பள்ளியில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் அருட்தந்தை V.ஜார்ஜ் சே.ச.,அவர்கள் தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி புனித வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் முனைவர் M. பிரிட்டோ ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் வரலாறு நம் வாழ்வின் வழிகாட்டி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
லெவே வரலாறு மற்றும் தொன்மை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு G.சேவியர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
பட்டதாரி ஆசிரியர் திருமிகு K. விக்டர் சாமிக்கண் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.
இயக்கத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு J. ஜோசப் பிரவின் ராஜ் அவர்கள் நன்றி உரை ஆற்றினார் .
திருமிகு T.அலெக்ஸ் ராஜ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இயக்கத்தின் மாணவர்கள் 125 பேர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Post a Comment
Thanks for reading.