2026 -2027ஆம் கல்வியாண்டின் முதல் பள்ளி பேரவை புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இப்பள்ளி பேரவையானது தாளாளர் அருட் சகோதரர் .K.ஆரோக்கியசாமி சே.ச அவர்களது தலைமையிலும் ,தலைமையாசிரியர் அருள்தந்தை.V. ஜார்ஜ் சே.ச மற்றும் அருள்தந்தை,S.ஜெயராஜ் சே.ச முதுகலை ஆசிரியர் அவர்களது முன்னிலையிலும் நடைபெற்றது.
இப்பேரவையானது இறைவணக்க பாடலுடன் இனிதே துவங்கியது.
பேரவையில் வந்திருக்கும் அனைவரையும் திரு.S. மரியயேசு ராஜா பட்டதாரி ஆசிரியர் அவர்கள் வரவேற்றார்
மேலும் மும்முறை வாசகங்களும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
பள்ளியில் புதிதாக பணியேற்றுள்ள உள்ள ஆசிரியர்களை திரு.S. ரெக்ஸ் தாமஸ் உதவித் தலைமை ஆசிரியர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
புதிதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து அறிமுகப்படுத்தப்பட்டனர் .
மேலும் பள்ளியின் ஒழுக்க நெறிகளை பற்றி தலைமையாசிரியர் அருள்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரையும் திருமதி.S. ஜூலியா பட்டதாரி ஆசிரியர் அவர்கள் நன்றி பாராட்டினார்.
மேலும் இந்நிகழ்ச்சியை திரு.M. சுதாகர் தமிழாசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.




Post a Comment
Thanks for reading.