10.6.2026 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பு தலைவர்களுக்கான திசைவழியாக்கப் பயிற்சி நடைபெற்றது.

தலைமையாசிரியர் அருள்தந்தை.V. ஜார்ஜ் சே.ச மற்றும் அருள்தந்தை,S.ஜெயராஜ் சே.ச முதுகலை ஆசிரியர் அவர்களது முன்னிலையில் நடைபெற்றது. இப்பயிற்சியானது 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய வகுப்பு மாணவ தலைவர்களுக்கு நடைபெற்றது.
மாணவர்களுக்கு உங்களுக்குள் இருக்கும் தலைவனை /தலைமையை வெளிக்கொணறுதல் என்ற தலைப்பின் கீழ் அருட்பணி. ஜோசப் ஆரோக்கியசாமி சே.ச அவர்கள் கருத்துரையை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு பற்றிய கருத்துரையை திரு .ம.அந்தோணி துரை முதுகலை தமிழாசிரியர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுடைய தலைமை பண்பை வளர்க்கவும் வகுப்பில் மாணவருடைய தலையாயக் கடமைகளை திறம்பட செய்யவும் அறிவுறுத்தப்பட்டது . இப்பயிற்சியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் .மேலும் இந்நிகழ்ச்சியை திரு.F.ஜான்சன் பட்டதாரி ஆசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.










Post a Comment
Thanks for reading.