SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா -24.03.2026

 24.03.2025 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் அருள் தந்தையருக்கு ஜூபிலி விழா நடைபெற்றது.



இவ் விழாவினை புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள் முனைவர்.M. பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று திருப்பலி நிறைவேற்றி ஆசிரியர்களுக்கு ஆசிரியரை வழங்கினார்.

மேலும் எம் பள்ளியின் தாளாளர் அருட் சகோதரர்.K.ஆரோக்கியசாமி சே.ச, தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச மற்றும் அருட்தந்தை.Y. பாஸ்கர் சே.ச,அவர்களும் முன்னிலை வகித்தனர்.


புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை P.S.அருள் சே.ச  அவர்களுக்கு ஜூப்ளி விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திரு.Bபுதுமை ராஜா முதுகலை ஆசிரியர்  அவர்கள் வரவேற்றார்.








எம் பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பாராட்டு பெறுபவர்கள் திரு.R.ஜோசப் டிக்ன் முதுகலை ஆசிரியர்- உயிரியல், திரு K.விக்டர் சாமிக்கண், பட்டதாரி ஆசிரியர்- சமூக அறிவியல்,திரு.F. ஜோசப் வின்சென்ட்  பட்டதாரி ஆசிரியர் -அறிவியல் ,விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

மேலும் திரு.T.அலெக்ஸ் ராஜ்குமார், திருS.இருதயராஜ் மற்றும் திருR.ராஜமாணிக்கம்  ஆகியோர்  பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை  வாழ்த்தி பாராட்டினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V,ஜார்ஜ் சே.ச அவர்கள் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி பாராட்டினார்.

இவ்விழாவில் உழைத்திட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் போற்று பொருட்டு நன்றியுரை ஆசிரியர் அலுவலர் சங்க செயலர் திரு.R. சகாயராஜ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.


இவ்விழாவில் பள்ளி பாடகர் குழுவினரால்  இறைவணக்கம்  மற்றும் வாழ்த்துப் பாடல்  பாடப்பட்டது.



மேலும் விழாவில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.


இவ்விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கே தொகுத்தவர் திரு.J. டேனிபால் முதுகலை ஆசிரியர்  அவர்கள்.



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post