12ஆம் வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு
நாள்: 16.06.2025 | நேரம்: பிற்பகல் 2.15 மணி முதல் 4.00 மணி வரை |
இடம்: வளனார் அரங்கம்
பள்ளியின் 12ஆம் வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி 16.06.2025, திங்கள்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் உள்ள வளனார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முதலில், திரு. M. ஜான் மனோஜ் (முதுகலை ஆசிரியர்) அவர்கள் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து திரு. P. இன்னசென்ட் சேவியராஜ் (முதுகலை ஆசிரியர்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
தலைமை ஆசிரியரர் அருட்திரு. V. ஜார்ஜ் சே. ச., அவர்கள் மாணவர்கள் எதிர்நோக்கும் பொதுத் தேர்வுகளின் முக்கியத்துவம், பெற்றோர் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
அதன் பின்னர் ஆசிரியர் கருத்துரை என்ற தலைப்பில் திரு. R. J. வின்ஸ்டன் (முதுகலை ஆசிரியர்) அவர்கள் மாணவர்களின் வகுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
அதனைத் தொடர்ந்து அருட்திரு. A. M. ஜெயபதி ( இயக்குனர், அருட்பே சுகலாயம்) அவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து முக்கியமான கருத்துரையைக் கொண்டு வந்தார்.
முடிவில், திரு. I. ராஜூ (முதுகலை ஆசிரியர்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
Post a Comment
Thanks for reading.